tamilnadu

img

மம்தா பானர்ஜியின் செயல் அவமானமாக உள்ளது!

கொல்கத்தா:
கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் பயிற்சி மருத்து வரை நோயாளியின் உறவினர்கள், கும்பலாக வந்து தாக்கியது, மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தங்களுக்குப் பாதுகாப்பு கோரி, மேற்குவங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரு கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிற பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், “மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் செயல் தனக்கு அவமானமாக உள்ளது” என்று, கொல்கத்தா மேயர் பர்கத் ஹக்கீமின் மகள் ஷபா ஹக்கீம் கூறியுள்ளார். இவரும் ஒரு மருத்துவர் என்ற வகையில், மம்தாவுக்கு எதிராக ட்விட்டரில்கண்டனப் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், “நான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் தான். ஆனால், எங்கள் கட்சித் தலைவி யும், முதல்வருமான மம்தாவின் தற்போதைய செயலற்ற தன்மையால் மிகவும் அவமானம் அடைந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நோயாளிகளின் நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், மருத்து வர்களின் பாதுகாப்பு குறித்து ஏன், யாரும் கவலைப்பட மறுக்கிறார்கள். இரண்டு டிராக்டர்களில் குண்டர்கள் வந்து, மருத்துவர்களைத் தாக்கியுள்ள னர். அந்த டிராக்டர்களை மருத்துவமனைக்குள் காவல்துறை எப்படி அனு மதித்தது? இதற்கு காவல்துறையின் பதில் என்ன?” என்றும் ஷபா ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

;